புதன், 28 மே, 2014

தமிழின் பெருமையை உலகறிய செய்தவர்.








சமஸ்கிருதத்தை "தேவ பாஷை' எனவும் தமிழை "நீஷ பாஷை' எனவும் தாழ்த்தி, தமிழ் இலக்கியங்கள் யாவும் வடமொழி வழிவந்தவை என நேராகவும் உரைகளின் வழியாகவும் பார்ப்பனர்கள் இழிவு படுத்திக்கொண்டிருந்தனர். இந்த ஆரிய சூழ்ச்சியை கால்டுவெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ( 1856 ) எனும் மொழியியல் ஆய்வு நூல் தகர்தெறிந்தது.



தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும் தமிழ்ச்சொற்கள் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீனில் இடம்பெற்றுள்ளன எனவும் தமிழ்மொழியே திராவிட மொழிகளில் மூத்த மொழி என்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மொழிகள் எனவும் இவையாவும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை எனவும் திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் என இருவகைப்படுத்தியும் தம் ஆய்வு முடிவுகளைக் கால்டுவெல் வெளிப்படுத்தினார்.

தமிழ் வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது என அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர். அதுநாள் வரை தமிழ்ப்பகைவரால் இழிவு படுத்தப்பட்ட தமிழ் மொழியின் தொன்மையை,பெருமைகளை ஆய்வுகள் மூலம் நிருவியதில் அறிஞர் கால்டுவெலின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
திராவிடர் விடுதலைக் கழகம்

மேலும் அறிய: http://en.wikipedia.org/wiki/Robert_Caldwell

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!