செவ்வாய், 15 ஜூலை, 2014

இலங்கைத் தமிழர்கள்...!

இலங்கைத் தமிழர்களைப் பற்றி: ஒரு முன்னாள் போராளியும், போர் காலங்களில் பல விதமான இன்னல்களை சந்தித்தவரும், இன்றளவும் இலங்கைத் தமிழர்களை நேசித்து அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிற ஒரு மாவீரரின் அனுபவ கருத்துக்களை நான் இப்பக்கத்தில் பகிர்ந்துகொள்ளுகிறேன்.


http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27028

இலங்கையைப்பற்றி:


தமிழன் மறக்ககூடாத இடங்கள் இரண்டு: பர்மா மற்றும் இலங்கை.....

இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை என்பது தமிழனின் வரலாற்றில் இரண்டாவது நிகழ்வாகும். இதற்கு முன்னரே ஒரு முறை தமிழ் இன அழிப்பு நடந்தது என்பது இத்தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை... காரணம் கடைசி நூற்றாண்டில் தமிழன் இந்தியனாக இருந்து விட்டான். எனினும் அத்துயர நிகழ்வு இன்று வெளிச்சத்தில் படமாக்கப்படப் போகிறது ...


இலங்கைப்பிரச்சனை இன்றோ நேற்றோ தொடங்கவில்லை. இலங்கை இந்தியா சுதந்திரம் அடைய முன்னரே அந்த பிரச்சனை தொடங்கிவிட்டது. இதுவரை 15 லட்சம் தமிழர் அநீதியான முறையில் தமிழராகபிறந்த ஒரே காரணத்துக்காக கொல்லப்பட்டுள்ளனர் .


கடந்த சில வருடங்களாக உக்கிரைன் நாட்டில் ரஷ்யாமொழி பேசும் ரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் 
உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் கூறி ரசியஆதரவுடன் தனிநாடாக பிரிந்துள்ளதை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்.


ஏறத்தாழ 60 வருடங்களுக்கு மேல் உரிமைகளுக்கு போராடும் மக்கள் பல லட்சம் கொல்லப்பட்டும் இதுவரை உரிமைகளும் இல்லை ,தனித்து பிரிந்து போக அனுமதியும் இல்லை .இதை யார் எப்படி தடுக்கின்றனர் ?இலங்கை அரசின் பணத்துக்கும் அழகான பெண்கள் இரத்தின கற்களுக்கும் விலைபோன 

ஊழல்கார இந்திய அரச உயர் அதிகாரிகளால் இந்திய நலன் என்ற போர்வை போத்திய வாளால் வெட்டி தடுக்கின்றனர் .அதற்க்கு மலையாள மொழியும் வங்காளமொழியும் பேசும் உயர் அதிகாரிகள் இலங்கை அரசுக்கு ஐநாவிலும் உதவினார்கள்.வேறுபல வெளி நாடுகளிலும் உதவுகின்றனர் .இதற்க்கு ஊழல் ஒன்றையே கொள்கையாகவும் தன்னுடைய குடும்பம் வாழ்ந்தால் போதும் 
என்ற குறுகிய மனப்பான்மை உள்ள அரசியல்கட்சிகளும் பேருதவி புரிந்து இலங்கைத் தமிழனின் வாழ்வையே வேதனைக்குள்ளாகியுள்ளார்.




மனிதம் /மனிதத்தன்மை /ஜீவகாருண்ணியம் உள்ள மக்களிடம் அறப்போராட்டம் செய்யலாம். இலங்கையை பொறுத்தளவில் இந்த கலவரம் 
1920ஆம் ஆண்டு முதல்முதல் தொடங்கியது. அந்த நேரம் தமிழர் மதமாகவோ சாதியாகவோ பிரதேசவாரியாகவோ பிரிக்கப்படவில்லை .அதனால் அந்த முதல் கலவரம் சிங்களவனால் தொடங்கிய போதும் முஸ்லீம்கள் மூர்க்கமாய் திருப்பி தாக்கியதால் அந்தக்காலத்தில் மதராஸ் பட்டணத்து காவல்படை 
இலங்கை சென்று கலவரத்தை அடக்கியது. அதன் பின்னர் மிகவும் தெளிவாய் திட்டமிட்டு தமிழரை பல கூறுகளாய் கூறு போட்டு இலங்கையில் தமிழ்
இன அழிப்பை தொடர்ந்து செய்து வருகின்றனர் .


1920ஆம் ஆண்டு போடப்பட்ட திட்டம் தனிசிங்கள பவுத்தநாடு என்கின்றதிட்டம் .ஆகவே அங்கு இனியும் அறப்போராட்டம் என்பது நடக்கவே நடக்காது. பவுத்த
துறவிகள் மற்றைய சிறுபான்மை இனத்தவர்களைக் 
கொலைவெறியுடன் 

பார்க்கும்போது மற்றைய சாதாரண மனிதன் எப்படி அதை கையாள்வான் ?


இன்று உலகம் முழுவதும் அகதிகளாய் 20லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் 
வாழ்கின்றனர் .கடந்த 96ஆண்டுகளாக மிகவும் ரகசியமாகவும்  உறுதியாகவும் நடத்தப்பட்டுவரும் இன அழிப்பில் 10 முதல் 15 லட்சம் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டுள்ளனர் இலங்கையில் 200 வருடங்களாக வாழ்ந்த மலையகத்தமிழர் குடியுரிமை பறித்து நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர் .

காமராஜர் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் . தமிழகத்துக்கு பல நன்மைகள் செய்தவர். ஊழல் அற்ற, தற்பெருமை அற்ற ,மிகவும் நல்ல அரசியல்வாதி. ஆனால், அவர் இந்தியா என்ற நாட்டுக்கு அருமையான பொக்கிஷம் .

தமிழரை பொறுத்தளவில் அவரை(காமராசரை) நம்பவைத்து ஏமாற்றி விட்டனர் .200 வருடங்களாக இலங்கையில் வாழ்ந்து வந்த மலையகத்தமிழரை ஒரே இரவில் இலங்கைக் குடியுரிமை பறித்து இந்தியாவிற்கு திருப்பியனுப்பும் ஒப்பந்தமான சாத்திரி/சிறீமா ஒப்பந்தத்தை ஆதரித்தார். இலங்கை இந்திய அரசுகளின் தமிழ் இனஅழிப்பு சதியை இனம்காண தவறிவிட்டார். முல்லைபெரியாற்றை கேரளாவுடன் இணைப்பதை ஆதரித்தார்.ஆகவே பெரும் தலைவர் காமராஜர் இந்தியா என்ற நாட்டுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார்.அதன் பின்னர்தான் தமிழகத்துக்கு விசுவாசமாக இருந்தார் .அதை மத்திய அரசும் மலையாளியும் நன்கு பயன்படுத்திகொண்டனர். 

இந்து முஸ்லீம் பிளவு இலங்கை உளவுத்துறையால் ஏற்படுத்தப்பட்டது. அதிஉச்ச அடக்குமுறைகளில்... ஏமாற்றங்களில்...உரிமைகள் மறுக்கப்படும் ஒரு இனத்தை மிகவும் இலகுவாக பல கூறுகளாக பிரிக்கலாம்.அப்படி பிரித்தே ஆயுதப் போராட்டம் அடக்கப்படது. இப்போது தமிழர் பிரதேசங்களில் சாதிச்

சண்டை, ஊர்ச்சண்டை போன்றவைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. கரோயின், கொக்கையின் போன்ற போதைவஸ்துக்களை மிகவும் தாராளமாய் தமிழர் பிரதேசங்களில் வினயோகிப்பதால் இளம் சந்ததியினர் அழிக்கப்படுகின்றனர். 



தமிழகத்தைப்பற்றி:


விசுவாசம் என்ற மாயையில்/வெறியில் சிக்கி அதிலிருந்து மீண்டு சுய அறிவில் சிந்தித்து செயல்பட முடியாத அளவில் தமிழர்கள் பலர் உள்ளனர். கட்சியோ /கட்சித்தலைமையோ என்ன தவறு செய்தாலும் அதை பூசி மெழுகி மறைக்கவே இவர்கள் விரும்புகின்றனர். ஒருதவறை அல்லது இருதவறை மறக்கலாம். மன்னிக்கலாம்.. தப்பில்லை... ஆனால் தமிழ் என்னுயிர் /தமிழ் என் மூச்சு என்பவர்கள் தமிழுக்கு விசுவாசமாய் இல்லாவிட்டாலும் துரோகம் செய்வதை தவிர்த்திருக்க வேண்டும். கச்சதீவில் தொடங்கி காவிரி, முல்லை பெரியாறு ,கிஷ்ணாநதி ,மீத்தேன் என்று எல்லாம் மறைமுகமாய் தமிழனை அழிக்க உதவியவர்களை தமிழர்கள் நம்புவது இன அழிப்பை மேலும் வலுப்படுத்தும்.


ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது தலைவர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளும் ,ஆட்சி அதிகாரம் பறிபோனவுடன் அவர்கள் வாயில் இருந்து 
வெளிவரும் வார்த்தைகளும் வேறானது. இப்போது நாம் வாழ்வது நவீனதொழில் நுட்பகாலத்தில் யார் யார் என்ன பிழை செய்கின்றனர் என்பதை மிகவும் தெளிவாக அலசி ஆராய்ந்து பார்க்கமுடியும்.

http://srilankagenocidehistory.blogspot.in/2010/11/after-vanni-war-2009-1.html
ஈகைச்சுடர் முத்துக்குமார் தனது துண்டுப்பிரசுரத்தில் எழுதியவை எல்லாம் உண்மை .தாமும் தம்முனுடைய குடும்பமும் வாழ்ந்தால் போதும் மற்றவர்கள் எக்கேடுகெட்டாலும் அதைப்பற்றிக் கவலை இல்லை என வாழும் தலைவர்களும் மக்களுமே, தமிழக மீனவர் துயரங்களுக்கும், ஈழத்தமிழரின் இனஅழிப்பிற்கும் உறுதுணையானவர்கள். 'ஆயுதமானது நூறு பேரைக் கொன்றால் அலட்சியமானது ஆயிரம் பேரைக் கொல்லும்' என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


அறப்போராட்டம் வெல்லுமா?

மனிதம் /மனிதத்தன்மை /ஜீவகாருண்ணியம் உள்ள மக்களிடம் அறப்போராட்டம் செய்யலாம். இலங்கையும் பவுத்தமதத்தலைவர்களும் இவற்றிற்கு அப்பார்பட்டவர்கள். ஆகவே சிங்களவனின் நோக்கத்தை அறியாமல் அறப்போராட்டம் போராடலாம் என்று சிந்திக்க வேண்டாம் .ஐநா தலையீடு செய்து நாடு பிரிப்பதே தமிழர் வாழ்வதற்கு ஒரே வழி .இப்போது அரசாங்கத்துக்கு உதவிய தமிழர்கள் அனைவரும் இதை உணர்வார்கள்.  இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.



ஈகைச்சுடர். திரு.கே.முத்துகுமார். (அவர் எழுதிய இறுதி அறிக்கையின் நான்கு பக்கங்களையும் காண இப்படத்தின் மீது க்ளிக் செய்யவும்)
திரு. ஜெயராமன் அவர்கள் இலங்கை பற்றிக் கூறுவது:
(Retired Assistant Commissioner of Hindu endowment department. Founder and former secretary of Sivaganga District Chess Association. Chess coach of Namma Madurai Organisation Registered Lawyer with Tamil Nadu Bar Council. Date of birth is 6.8.1951 and Politician)

எனக்கு தெரிந்தவரை தமிழர்கள் திரு செல்வநாயகம் போன்றவர்கள் 


ஆரம்பத்தில் அறவழியில் தான் போராடியுள்ளார்கள். பலமுறை 


உண்ணாவிரதம் கூட இருந்துள்ளார்கள் .சாத்வீக போராட்டக்காரர்களை அரசு, 


பயங்கர வாதம் மூலமே நசுக்கியுள்ளது. இனி சாத்வீக போராட்டத்தில் 


எதையும் சாதிக்க இயலாது தள்ளிய பொழுது தான் இளைய தலைமறையினர் 


ஆயுதங்களை தூக்கியுள்ளனர்,



இப்படி தமிழர்களின் உயிரை பறித்த இலங்கை அரசுக்கு பதிலடி கொடுக்கவே 


ஆயுதங்களை தமிழர்கள் தூக்கியுள்ளனர். முதலில் போலிஸ் நிலையங்களை 


தாக்கி ஆயுதங்களை கொள்ளை அடித்து அந்த ஆயுதங்களைக் கொண்டே 


தங்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இதில் சில வழக்குகள் தொடரப்பட்டு 


அன்றைய காலகட்டத்தில் முக்கிய போராளிகளாக இருந்த குட்டிமணி ஜெகன் 

ஆகியோருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது.


இவர்தான் குட்டிமணி என்பவர். மேலும் அறிய : http://aiviral.blogspot.in/2014/07/blog-post_23.html
இதில் குட்டிமணி என்பவர் தனது கடைசி ஆசையாக தனது தூக்குத் 

தண்டணையை நிறைவேற்றிய பிறகு தனது கண்கள பார்வையற்ற 

ஒருவருக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த கண்கள் முலமாக தமிழ் ஈழம் 

மலர்வதை பார்ப்பேன் என்று கூறிய தாக தெரிகிறது. இதன் பின்பு 

வெளிக்கட சிறையிருந்த தமிழர்களையெல்லாம் கொன்று குட்டிமணி 

ஜெகன் ஆகியவர்களின் கண்களை ஆயுதங்களால் தோண்டியெடுத்து இந்த 

கண்களால்தான் தமிழீழம் பார்ப்பாயா எனக்கூறி கண்களை அழித்ததாக 

கூறப்படுகிறது. 



இதன் பிறகு பிரபாகரன் ஸ்ரீசபாரத்தினம் போன்றவர்கள் தீவிர போராட்டத்தில் 

இறங்கியுள்ளனர். பல இயக்கங்களாக பிரிந்து தங்களைத்தாங்களே மாய்த்துக் 

கொள்வதும் அரங்கேறியது. இந்தியா தலையிட்டு ஐ.பி.கே.எப் படை 

கிட்டத்தட்ட போராளிகளின் பலத்தை பாதியாக குறைத்து விட்டது. 

அதன்பிறகு இந்திய பிரதமரின் கொலை ஈடு செய்ய முடியாத இழப்பை 


ஏற்படுத்திவிட்டது.  கடற்புலிகளின் தலைவராக இருந்த கருணா இலங்கை 


அரசுப் பக்கம் சேர்ந்து அமைச்சராகி புலிகளின் இராணுவ இரகசியத்தை 


எல்லாம் உடைத்துவிட்டார்.  இந்நிலையில் சாவதைத்தவிர வேறு 


என்ன வழியிருந்து. செத்தார்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள். 


விடியலுக்கான வெளிச்சத்தைக் காணோம் ஈழ உடன் பிறப்புக்களுக்காக சில 


துளிக்கண்ணீரை காணிக்கை ஆக்குவதைத் தவிர வேறு வழி இல்லை,


பின் குறிப்பு: இவ்வளவும் நடந்தேறிய போது நமக்காக யாருமே குரல் கொடுக்கவில்லை, போராடவுமில்லை என்று நினைப்பது பிழையாகும். அதற்கென போராடிய, தீக்குளித்த, உயிர் கொடுத்த, சிறை சென்ற வரலாறுகளும் ஒருபுறம் இருக்கிறது. ஒன்றிரண்டு மட்டும் இத்துடன் இணைக்கப்படுகிறது. 

1) திரைப்படத்துறையினர் இணைந்து இலங்கையின் போர்க்குற்ற அத்துமீறல்களையும், இனப்படுகொலையையும்  கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய செய்தியைக் காணலாம். 



2) கீழுள்ள படத்தின் மீது க்ளிக் செய்தால் 2009 ல் நமது மாணவ செல்வங்கள் போராடிய் விவரத்தை காணலாம்.


                  
http://tamilmakkalkural.blogspot.in/2009_10_01_archive.html

1 கருத்து:

  1. சரித்திரம் முழுமையாக இல்லை. அவர்களால் அழிக்கப்பட்ட பிற தமிழ்த் தலைவர்கள் பற்றி சொல்லப் பட வேணடும். அந்தச் செயல்களால் இன்று ஈழத் தமிழர்கள் ஒரு தலைமை இன்றித் தவிக்கிறார்கள். இது என் புரிதல். உண்மைகளை நடந்தது நடந்தபடி பதிவு செய்வது அவசியம்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!