திங்கள், 30 ஜூன், 2014

உலகில் முன் தோன்றிய மூத்தமொழி....!

முன் தோன்றிய மொழியின் அருமை.
(The fineness of the first language of this world.)
        
            மொழி என்றால் என்னவென்பதை அறியாத விலங்கினங்கள் கூட தங்களுக்கிடையே உணர்வொலிகள் மூலமாக பேசிக்கொள்வதை இன்றைய அறிவியல் தெளிவாக விளக்குகிறது.

            கடல்மீன் இனத்தை சேர்ந்த் டால்பின்கள் கூட தங்களுக்குள் சமிக்னை ஒலிகளை ஏற்படுத்தி தமது இனத்தை சேர்ந்த பிற மீன்களுடன் உரையாடிக் கொள்வதாக விஞ்ஞானமானது நிரூபித்துள்ளது.
       
            சரி, நாம் விடயத்திற்க்கு வருவோம்....இவ்வாறான உணர்வொலிகள் அனைத்தையும் உயிரெழுத்துக்களாக கொண்டு இயங்குகின்ற மொழியே உலகின் முதன் மொழியாகிய நம்  தமிழ் மொழி.

"See dear, there is a world outside this sea...!"


                  ஆச்சர்யம் அதிர்ச்சி போன்றவைகளை வெளிப்படுத்தும் ஒலியாக அ... ஆ... என்பவைகள் இருக்கிறது. சிரிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் இ... ஈ.... என்னும் ஒலிகளில் அடங்கியுள்ளது. துன்பம், அழுகை, பயம் போன்றவைகள் உ... ஊ... என்னும் ஒலிகளில் அடங்கியுள்ளது. பிறரை அடக்கும் போதும் அதட்டும் போதும் எ...ஏ...என்கிறோம்.  மிகுதியான ஆச்சர்யம் அதிர்ச்சி போன்ற் உணர்வுகள் ஒ... ஓ... என்னும் ஒலிகளில் அடங்கியுள்ளது. வக்கனையின் போது என்று கூறுவதும், விக்கலின் போது எனக்கூறுவதும் கூட உணர்வொலியே...!
           
          
          ஆம்.... ஊமையாய் பிறந்த ஒருவர் கூட தமிழராய் பிறந்திருந்தால், இந்த உணர்வொலிகளை பயன்படுத்தியே அதிக பிரச்சினையில்லாமல் வாழமுடியும். ஆனால் பிற மொழியினை உடையவராய் ஒரு ஊமை பிறந்துவிட்டால் சற்று கூடுதலான சிரமமே...!  இதுவே...நமது முன் தோன்றிய மூத்தமொழியின் சிறப்பாகும்.

               பிறந்த குழந்தையின் வாயில் தாமாகவே வரும் முதல் வார்த்தையும் அம்மா என்பதுதான். 

"தமிழும் உலகிலுள்ள பிறமொழிகளும்:
உலகிலுள்ள எல்லாமொழிகளும் தோன்றுவதற்குமுன் தமிழேயிருந்தது. 

தமிழ்மாந்தரே முதல்மாந்தர். அதாவது உலகில் தோன்றிய முதல்மனிதர்கள் 

பேசிய மொழி தமிழே.
அந்தமனிதர்களே உலகெங்கும் பரவினர். ஆதலால் ஆதிமொழியாகிய 

தமிழின் வேர் உலகிலுள்ள எல்லாமொழிகளிலும் இன்றும் இருக்கிறது.

உலகில் தோன்றிய எல்லாமொழிகளுள்ளும் தமிழ்மொழிமட்டுமே 

தானாகத்தோன்றியமொழி. பிறவெல்லாம் பிறமொழிச்சொற்களுடன் 

தம்மொழிக்கெனவும் சிலவற்றை பெற்றவை.
அந்த சிலசொற்களுள் சில இன்று தமிழுக்கும் வந்திருக்கலாம். அதற்கு 

வேர்ச்சொல்காணும்போது அது அந்த சொல்லுக்கு 

தொடர்புடையதாயிருக்கின்ற வேறொரு தமிழ்ச்சொல்லை 

காட்டுவதாகவுமிருக்கலாம்.
உண்மையான தமிழ்ச்சொல் வேரென்பதை பிறமொழிகளில் 

கண்டுபிடிப்பதென்பது அவ்வளவுக்கு எளிதானதன்று. இருப்பினும் 

பலமொழிகளிற்காணப்படுவதைக்கொண்டு சிலவற்றை 

அறுதியிட்டுக்கூறமுடியும்போலும்.
ஆய்வாளர்கள் பல தமிழ்ச்சொற்கள் பற்பலமொழிகளிலுள்ள சொற்களுக்கு 

வேர்ச்சொல்லாயிருப்பதை கண்டறிந்துள்ளனர்." -  பொன்முடி வடிவேல்:


தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.
செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி 

தமிழ் மொழி ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, 

ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, 

செம்மை, இயன்மை..., வியன்மை ‍என பதினாறு செவ்வியல் தன்மைகளைக் 

கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!
1)தொன்மை (Antiquity)

2)தனித்தன்மை (Individuality)

3)பொதுமைப் பண்பு (Common Characters)

4)நடுவு நிலைமை (Neutrality)

5)தாய்மைத் தன்மை (Parental Kinship)

6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life 

experience of the civilized society)

7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without 

any impact or influence of any other language and literature)

8)இலக்கிய வளம் (Literary Powers)

9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary 

expressions)

11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)
ஆதிதமிழர்கள் அறிந்து பயன்படுத்தி வந்தமை:
விரதம் இருந்தால் நாற்பது நாட்கள், வாரத்திற்கு ஏழு தினங்கள், ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு கோளின் பெயர், சந்திரனை அடிப்படையாகக் கொண்டிருக்கும் மாதக்கணக்கு, ஒரு வருடத்தில் எற்படும் பருவ மாற்றங்கள், ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பெயர், தசமத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் முறைகள், சூரியனை மையமாகக்கொண்ட நவக்கிரக வழிபாடு - இவை அனைத்தையும் ஆதிதமிழர்கள் அறிந்து பயன்படுத்தி வந்தமையை பார்க்கும்போது நிச்சயமாய் தமிழே இந்த உலகின் முதன் மொழியாக இருந்திருக்கவேண்டும் என்பதும், இங்கிருந்துதான் உலகம் முழுமைக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து வழக்கங்களும் பரவிற்று என்றும் அறுதியிட்டுக்கூற முடியும். (தகவல்கள் மேலும் வளரும்)
         
               தமிழ் மொழியின் சிறப்புகள்:-
கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது 

பொறிக்கபட்டிருகும்.

சீனா வானொலியில் சைனிஷ்க்கு அப்புறம் தமிழில் வணக்கம் சொல்வது வழக்கம்.
உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் 

பெற்று இருக்கும்..
ரஷ்ய அதிபர் மாளிகையான 'கிரெம்ளின் மாளிகை' என்னும் பெயர் நான்கு மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒன்றாக நம் தமிழ் உள்ளது.(ரஷ்ய மொழி, சீன மொழி, ஆங்கிலம் மற்றும் தமிழ்)

உலகம் அழிந்துவிட்டால்அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் நம் தமிழின் திருக்குறள் உள்ளது.

லண்டன் கேம்ப்ரிட்ஜில் தமிழ் மொழிக்கென தனி துறை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயேமுதன்முதலில் பரிசுத்த வேதாகமம் (பைபிள்) மொழி பெயர்க்கப்பட்டது நமது தமிழ் மொழியில் தான்.
உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல் 

திருக்குறள்..  

உலகம் அழிந்துவிட்டால்அடுத்த தலைமுறை படிப்பதற்காக பாதுகாக்கப்படும் மொழி நூல்களில் நம் தமிழின் திருக்குறள் உள்ளது.

முதன் முதலில் நிலவுக்கு சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட்ட விண்வெளி வீரர்களுக்கு கற்பிக்கப்பட்ட மொழிகளில் தமிழும் ஒன்று.

ஆங்கிலத்துக்கு பின் இணைய தளத்தில் அதிக வெப்சைட் மற்றும் பக்கங்களை உடையது தமிழ் மட்டுமே.
நவீன யுகத்திலும்,

  காந்தியும் , சுபாஸ் சந்திர போசும் அடுத்த பிறப்பு ஒன்று இருந்தால் தமிழனாக பிறக்கவேண்டும் என்று கூறியதாக வரலாறு கூறுகின்றது. (ஒருவேளை அவர்கள் ஏற்கனவே பிறந்துவிட்டு இருந்தால், இப்பொழுது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
)

1 கருத்து:

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!