புதன், 28 மே, 2014

சங்கத்தமிழ் வளர்த்த சிவபெருமானார் (அன்பே சிவம்)






அன்பே சிவம்' அப்பேர்ப்பட்ட அன்பு உதமாகின்ற இடம்! நம் இருதயம். அங்கிருந்துதான் அளக்க முடியாத அன்பு பேரலை பெருகி வருகின்றது. இந்த அன்பு பேரலை பெருகி வருகின்ற இருதய சக்ரத்தை "அன்ஹாதம்" என்று குண்டலினி சக்தி குறிப்பிடுகின்றது. இச்சக்ரத்தின் சின்னம்தான் சரவணபவம். குண்டலினி சக்தியின் அடிபடையில் நம் உடல், 72,000 நாடிகளாக கொள்ளபடுகின்றது. இதுவே இடா என்றும்! பிங்கலை என்றும் மற்றும் சுஸ்மானவாக மூன்று பிரதான நாடிகளாக உருவெடுக்கின்றது. இடா நாடியை சந்திர கலை என்றும். பிங்கலை சூரிய கலை என்றும் மற்றும் சுஸ்மானவை ஆனந்த மயமானதாய் சித்தர்கள் அறிவார்கள்.

மேற்சொன்ன இந்த மூன்று முக்கிய நாடிகளும் முறையே இயங்கிடும் போது அன்ஹாதத்தில், சரவணபவ என்ற அன்பு சக்கரத்தில் அளவற்ற அன்பு பேரலை உதயமாகிறது. இந்த அன்பு பேரலையின் பிரவாகத்தால் மனிதன் தன் 72,000 நாடிகளிலும் ஆனந்த அதிர்வுகளை உணர்கிறான். 



இந்த உணர்வுகள் இருதயக் கமலத்தில் இருந்து இடா, பிங்கலா நாடிகள் வழி, அனைத்து நாடிகளுக்கும் சென்று சேர்கின்றபோது, அம்மனிதன் ஆனந்த பேரானந்தத்தில் வண்ண மயில் தோகை விரித்தடுவதை போல், தன் நாடிகளில் உணர்கிறான். இப்பெருநிலை எய்திய மாமனிதனின் இருதயக் கமலத்தில் தானாகவே, அன்புக் கடவுளாகிய ஸ்ரீ முருக பெருமான் விரும்பி அமர்கிறார். ஸ்ரீ முருக பெருமான் அமர்ந்துவிட்ட அவ்வுடல் அன்று முதல் மாமயில் போலாகி ஆனந்த கூத்தாடும். இவ்வுடலில் அவர் வாழ்ந்திடும் வரை வண்ண மயில்போல் ஸ்ரீங்காரத்துடனும், அழகுடனும், கம்பிரத்துடனும் தோகை விரித்தாடி பெருவாழ்வு வாழ்வார்.
-The Truth Nothing But Truth





எங்கே? எங்கே? எங்கே?
நாடிகள் 72000 கொண்ட இந்த மேனியில்
நாடுவதும் தேடுவதும் ஓடுவதும் எங்கே? 
ஐயும் க்லியும் சௌவும் போவதும் எங்கே?
முடிவில்லா பயணத்தின் முடிவும் எங்கே?

தெய்வம் கொடுத்த தேகத்தின் தெய்வீகம் எங்கே?
மாசற்ற ஜோதியாகிய ஆன்மா உறைவதும் எங்கே?
மலர்ந்த மலர்ச்சுடரை நிலையாய் காண்பதும் எங்கே?
சித்தத்தில் அம்பலவான் ஆட்டமும் எங்கே?

இரண்டு கண் தத்துவம் அறிவதும் எங்கே?
மூன்று கண்னோடு நித்தியமாய் நிற்பதும் எங்கே?
அம்மையும் அப்பனும் சேர்வதும் எங்கே?
அடியும் முடியும் காண்பதும் எங்கே?

ஆதியும் அந்தமும் இல்லா ஜோதியும் எங்கே?
மகேஸ்வர ஜோதியின் மகிமையும் எங்கே?
மங்காத சுடரின் மகத்துவம் எங்கே? அற்புதம் எங்கே?
அதிசயம் எங்கே? ஆனந்தம் எங்கே? - ஸ்ரீ சூரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!