ஆம்...நமது தமிழ்த்தாய் ஆதியில் ஈன்றெடுத்த பதினெட்டு சித்தர்களும் விஞ்ஞானிகளே...! இன்றளவும்...சீனாவின் இணையற்ற குருவாகவும், ஞானியாகவும் கருதப்படும் போதி தர்மரும் கூட நமது தமிழ்த்தாய் ஈன்றெடுத்த தவப்புதல்வர்தான்...! அதைதொடர்ந்து எத்தனையோ படிக்காத மேதைகளையும் ஞானிகளையும் ஈன்றவள் நம் தமிழ்த்தாய்...!!!
இவர்களுள் ஒருவரான மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழர் டாக்டர்.V.A. சிவா அய்யாதுரை அவர்கள் தமிழர் என்கிற உணர்வுடன் உலக அளவில் சிங்கத்தைப் போல கர்ஜனை செய்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் இவரைத் தவமிருந்து ஈன்ற தமிழ்த்தாயானவள் மிகவும் பெருமைப்படுகிறாள்...!
இவர்களுள் ஒருவரான மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழர் டாக்டர்.V.A. சிவா அய்யாதுரை அவர்கள் தமிழர் என்கிற உணர்வுடன் உலக அளவில் சிங்கத்தைப் போல கர்ஜனை செய்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் இவரைத் தவமிருந்து ஈன்ற தமிழ்த்தாயானவள் மிகவும் பெருமைப்படுகிறாள்...!
புறாவைப் பயன்படுத்தி தூது அனுப்புவது முதல், அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்துகொண்டே வந்தது. கணினி என்ற ஒரு வஸ்துவை கண்டுபிடித்த பிறகு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்த முடியவே இல்லை..
கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும் அதனுடைய வளர்ச்சி வேகம் இருமடங்காகியது என்றால் அது மிகையாகாது. அதுவும் தகவல்தொடர்புக்காக பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருள்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டது. அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை அத்தியாவசியமான ஒன்று.
தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகத்தில் முக்கியமான அலுவலக கோப்பு பரிமாற்றங்கள் முதல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்த அளவிற்கு மின்னஞ்சலின் முக்கியத்துவம் நமது அன்றாட வாழ்வுடன் கலந்துவிட்டது.
இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலை கண்டுப்பிடித்து தகவல்தொடர்பு உலகிற்கு அர்பணித்தவர் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரியது. ஆம் நண்பர்களே..! மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அதனை முதன் முதலாக உலகிற்கு அளித்தவர் ஒரு தமிழரே! அப்போது அவருக்கு வயது வெறும் 14 தான். V.A. சிவா அய்யாதுரை என்ற பெயர்கொண்ட இவர்தான் பயன்மிக்க மின்னஞ்சலை உருவாக்கியவர். பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம் நாள்தான் முறையாக இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமையைப் பெற முடிந்தது. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்த இந்த வியத்தகு கண்டுபிடிப்பிற்கு பலரும் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது வேறு கதை.
டாக்டர். சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது. இப்படி இந்தியா அவமதித்தவரைதான் அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா மாநாடு சிறப்பித்துள்ளது...! இன்றைய நிலையில் பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான, சிவா அய்யாதுரை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் MIT யில் விரிவுரையாளரும் கூட.
மாணவப் பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமைப் பெற நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டார். இதைப்போன்ற கஷ்டகாலம் மற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வரக்கூடாது " எண்ணத்தில் இவர் இன்னொவேஷன் கார்ப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையும் அறிவித்திருக்கிறார்.
(நன்றி: https://www.facebook.com/NatpenralNamEnpom?ref=stream)
அன்று ஈழப்போர் நடக்கும் போது புகழின் உச்சியில் இருந்த ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. அன்று அவர் தாம் தமிழால் உயர்ந்த உணர்வுடன் ஈழத்தின் வலியை அந்த விருது வழங்கிய மேடையில் சொல்லியிருந்தால் ஈழத்தில் நடந்த கொடூரம் உலகங்கும் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்திருக்கும் அது போரை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து நாட்டு மக்களும் அழுத்தம் கொடுப்பதற்கு வசதியாக இருந்திருக்கும். அதே போல, 2002 முதல் 2007 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர். அப்துல்கலாமும் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை பற்றி உலகறிய சொல்லியிருந்தால் குறைந்த பட்சம் இந்தியார்கள் அனைவர்க்கும் ஈழத்தில் நடந்துகொண்டிருந்த கொடூரம் தெரிந்திருக்கும்!
(நன்றி---Kamban Tamil)
முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கேம்ப்ரிட்ஜ்லுள்ள MIT
பல்கலைகழகத்திற்கு வருகைதந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு
தெரிவித்து போராட்டம் நடந்தது. போராட்டத்தை தமது நண்பர்களுடன் சேர்ந்து
நடத்தியவர்: மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி டாக்டர். வி. ஏ.
சிவா அய்யாதுரை அவர்கள். அதைப்பற்றி வெளியிடப்பட்ட செய்தியின்
துண்டத்தை (கட்-அவுட்டை) நீங்கள் கீழே காண்கிறீர்கள்.

(மேலுள்ள படத்தின் கருதுகோள்களின் மொழி பெயர்ப்பு)
ஒரே தேசம் / தமிழ் நாடு
"அமெரிக்காவின் பூர்வீக குடிமக்களைப் போல தமிழர்களும் தமது நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஆவார்கள். அவர்கள் ஆதி முதலே இயற்கையின் கோட்பாடுகளைப் போற்றி வளர்த்தவர்கள். கல்லும், மரமும், மிருகங்களும் கூட இறைவனால் படைக்கப்பட்டவைகளே என கூறி அனைத்திற்கும் சமத்துவம் அளித்தவர்கள்." - டாக்டர். வி.எ. சிவா அய்யாதுரை.
ஆனால், டாக்டர். சிவா அய்யாதுரை அவர்கள் மற்ற சாதனை தமிழர்கள் போல் இல்லாமல் தமிழர்களுக்கு நடக்கும் இழிவை இன்னல்களை கொடுமை உணர்ந்து தமது மாணவப்பருவம் முதல் போராடுகின்றார். தமிழ்தேசிய நாட்டை கட்டமைப்பதுதான் தமிழனத்தை தன்மானத்தோடு உலகில் வாழவைக்கும் என்பதை உணர்ந்து தமிழ்தேசிய நாட்டை கட்டமைக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்...!
ஒரே தேசம் / தமிழ் நாடு
"அமெரிக்காவின் பூர்வீக குடிமக்களைப் போல தமிழர்களும் தமது நாட்டின் பூர்வீக குடிமக்கள் ஆவார்கள். அவர்கள் ஆதி முதலே இயற்கையின் கோட்பாடுகளைப் போற்றி வளர்த்தவர்கள். கல்லும், மரமும், மிருகங்களும் கூட இறைவனால் படைக்கப்பட்டவைகளே என கூறி அனைத்திற்கும் சமத்துவம் அளித்தவர்கள்." - டாக்டர். வி.எ. சிவா அய்யாதுரை.
ஆனால், டாக்டர். சிவா அய்யாதுரை அவர்கள் மற்ற சாதனை தமிழர்கள் போல் இல்லாமல் தமிழர்களுக்கு நடக்கும் இழிவை இன்னல்களை கொடுமை உணர்ந்து தமது மாணவப்பருவம் முதல் போராடுகின்றார். தமிழ்தேசிய நாட்டை கட்டமைப்பதுதான் தமிழனத்தை தன்மானத்தோடு உலகில் வாழவைக்கும் என்பதை உணர்ந்து தமிழ்தேசிய நாட்டை கட்டமைக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்...!
The following are the quotes of Dr.V.A.Shiva Ayyadurai
***The Tamil people are a loving people. We love our fellow Indians, Italians, French, Japanese, etc. --- all of whom have a Nation. We just want ours! That's all.***
***The most important of all attributes is Courage. It is Courage that moves the world, not the wily and "thoughtful" conjectures of intellectuals, who sit on the sidelines, criticize and give a 100 reasons, why things won't work, and tell us to wait, wait, wait.... until the Spirit dies. TAMIL NADU --- ONE NATION!***
***Great Nations are built on the foundation of great Principles, Art and Science. We have all three, and DO NOT need India. The Tamil Nation has produced the greatest artists, scientists and yogis for India, and India has not reciprocated with even the basic kindness and respect we deserve.***
***A Nation, like any creation, is a System. And, we as a people, can engineer any kind of System, we want: fascist, free, democratic, autocratic, oligarchic, genocidal, etc. The Tamil people are now ready to engineer their own Nation, one in which we NO LONGER BEG or WAIT for kindness from our oppressors.***
***When Jews were killed in Germany, all Jews came together, and did not say "those are German Jews, we are American Jews". This is why it's absurd to say "Those are Sri Lankan Tamils, we are Indian Tamils." Now it's time to say, "I AM TAMIL NADU --- ONE NATION***
இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும், திரு. வி.ஏ. சிவா அய்யாதுரையே உங்களின் நினைவுக்கு வருவார் என நினைக்கிறேன். இன்று அனைவராலும் பயன்படுத்தக்கூடிய, மிகச்சிறந்த என்றும் அழியாத ஒரு கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி, உலக மக்களுக்கு வழங்கிய டாக்டர். சிவா அய்யாத்துரை அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்...! எங்கிருந்தாலும் இன உணர்வுடன் உள்ள சிவா அய்யாதுரை போன்றவர்களை பாராட்டி அவர் வழியில் தமிழ் உணர்வுடன் நடப்போம்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!