சனி, 31 மே, 2014

கீரைகளின் மருத்துவ குணங்கள் !

வெந்தயக் கீரை: உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும். வயிற்று புண். பேதியை கட்டுப்படுத்தும். அதிக இரும்பு சத்து கொண்டது. 

அரைக்கீரை: உடலில் உள்ள விஷங்களை முறிக்க கூடியது. தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். குடல் புண் வராமல் தடுக்கும். 
பசலைக்கீரை: உடலுக்கு குளிர்ச்சியை தரும். சீறுநீர் கட்டை குறைத்து நீரை வெளியேற்றும் சக்தி உடையது. தாய் பால் பெருகும். 

முருங்கைக்கீரை : உடலுக்கு சக்தி, வலிமையை அளிக்கக்கூடியது. இரும்பு சத்து அதிகம். ஆண்மையை அதிகரிக்க செய்யும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். ரத்தத்தை சுத்தம் செய்யும். மாத விலக்கு வரும் போது ஏற்படும் வலியை குறைக்கும். 

சிறுகீரை: மலச்சிக்கலை குறைக்கும். உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். உடல் தளர்ச்சியை போக்கும். 

மணத்தக்காளி கீரை: வயிற்று புண், குடல் புண்ணை குணப்படுத்தும். 

அகத்திக்கீரை: உடல் வெப்பத்தை குறைக்கும். குடற்புழுக்கலை அழிக்கும். பித்தம் தலை சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகளை போக்கும்.

Read more: http://www.vivasaayi.com/2014/04/amaranthus.html#ixzz33IxvlQkn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய கருத்துகளை வரவேற்கிறேன்...!